புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (15:27 IST)

நடிகை கடத்தப்பட்ட வழக்கு – முன்னணி நடிகருக்கு எதிராக மேலும் பலரும் வாக்குமூலம்!

தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் முன்னணி நடிகையாக இருந்தவரைக் கடத்தி பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்ட வழக்கில் சம்மந்தப்பட்ட நடிகர் திலீப்புக்கு எதிராக மேலும் சிலர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

நடிகை பாவனா சில ஆண்டுகளுக்கு முன்னர், படப்பிடிப்பை முடித்துவிட்டு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்தி சென்று 2 மணி நேரத்திற்கும் மேல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் மலையாள திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பாவனாவிடம் ஏற்கனவே கார் ஒட்டுனராக பணிபுரிந்த பல்சர் சுனில் இதில் முக்கிய மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. எனவே, அவரோடு மற்றும் சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும், இந்த வழக்கில், நடிகர் திலீப்பிற்கு தொடர்பு இருப்பதாக அப்போதே செய்திகள் வெளியானது. ஆனால், அவர் அதை மறுத்தார். ஆனால் அவரை கைது செய்த போலிஸார் 85 நாட்களுக்குப் பின்னர் ஜாமீனில் விடுதலை செய்தனர். இப்போது இந்த வழக்கு முக்கியமானக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

திலீப் சம்மந்தமாக பல நடிகைகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சில நடிகைகள் அவருக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் இந்த வழக்கில் இப்போது முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் அவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 வருட சிறை தண்டனை கிடைக்கலாம் என்று சொல்லப்பட்ட நிலையில் இப்போது தண்டனை இன்னும் அதிகமாக கிடைக்கும் என சொல்லப்படுகிறது.