ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 12 நவம்பர் 2024 (12:05 IST)

அந்த ஒரு காட்சியில் மட்டும் நடிக்க மாட்டேன்… தீவிரமாக டெல்லி கணேஷ் பின்பற்றியக் கொள்கை!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் எனக் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்புற விளங்கி வந்தவர் டெல்லி கணேஷ். திருநெல்வேலியில் பிறந்த இவர் டெல்லியில் சில ஆண்டுகள் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கியங்கிய நாடக உலகில் நுழைந்து நடிகரானார். அதன் பின்னர் பாலச்சந்தர் அவரை ‘பட்டினப் பிரவேசம்’ படத்தில் அறிமுகப் படுத்தினார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் அவர் பல நினைவுகூறத்தக்க படங்களை நடித்துள்ளார். சில நாட்களாக உடல் நலக் குறைவால் தனது 81 ஆவது வயதில் காலமானார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அவர் நடித்த காட்சிகள் மற்றும் அவரின் நேர்காணல்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அப்படி ஒரு நேர்காணலில் டெல்லி கணேஷ் பேசும்போது “எனக்கு எவ்வளவு கோடி ரூபாய் கொடுத்தாலும் இறப்பது போன்ற காட்சியில் மட்டும் நடிக்க மாட்டேன். மாலை எல்லாம் அணிந்து பிணமாக படுப்பது என்றால் எனக்கு ரொம்ப பயம். சாவு என்றால் யாருக்குதான் பயமில்லை. அதனால் அந்த காட்சியில் மட்டும் நான் நடிக்க மாட்டேன்” எனக் கூறியுள்ளார். அவரின் மரணச் செய்தி வெளியானதும் பலரும் அவரின் இந்த பேட்டியைதான் அதிகமாக பகிர்ந்துவருகின்றனர்.