1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 21 மார்ச் 2020 (08:48 IST)

கொரோனா வை விட ஆபத்தானவன் மனிதன்...மனிதகொரோனா – தமிழ் நடிகர் கோபம் !

தமிழ் நகைச்சுவை நடிகர் பாலசரவணன் கொரோனாவை விட மனிதன் ஆபத்தானவன் எனக் கூறியுள்ளார்.

தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பாலசரவணன். அவர் நேற்று தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் சானிட்டைசர்கள் அதிக விலைக்கு விற்கப்படுவது குறித்து பேசியுள்ளார்.

அந்த வீடியோவில் ‘மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் ஹேண்ட் சானிட்டைசர் தீர்ந்து விட்டதால் ,வாங்குவதற்காக கடைக்கு போயிருந்தேன். அங்கு 60 ரூபாய் விலையுள்ள சானிட்டைசர் 135 ரூபாய் என்று கூறினார்கள். அது குறித்து பில் போடுபவரிடம் கேட்டதற்கு ‘நான் என்ன செய்ய முடியும். நான் இங்கே வேலைதான் பார்க்கிறேன் என்று கூறினார். அதே போல காபி குடிக்கும் கடைக்கு சென்ற போதும் அவரும் இதே போல அதிக விலைக்கு சானிட்டைசர் வாங்கியதாக சொல்லி புலம்பினார். இதன் மூலம் இந்த நேரத்தின் சூழ்நிலையைப் பயன்படுத்தி அனைவரும், இரு மடங்கு மூன்று மடங்கு என விலையேற்றி விற்கின்றனர். இந்த மாதிரியான நேரங்களில்தான் தள்ளுபடி விலையில் தந்து மக்களை ஊக்குவிக்க வேண்டும். இதிலிருந்து ஒன்று மட்டும் புரிகிறது கொரோனாவை விட கொடூரமானவன் மனிதன். இந்த ஊரில் இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் சாதி ஒழியாது, ஏற்றத் தாழ்வு மாறாது, எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. ஒரு ஆணியும் புடுங்க முடியாது.’ எனத் தெரிவித்துள்ளார்.