1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (15:54 IST)

ஹீரோவாக அறிமுகமாகும் பாலகிருஷ்ணாவின் மகன்… போஸ்டர் வெளியிட்டு கவனம் ஈர்த்த படக்குழு!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக 40 ஆண்டுகளுக்கு மேல் இருப்பர் பாலகிருஷ்ணா. அவர் இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள நிலையில் அவரை ஒரு கடவுள் போல அவரது ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். அதற்கு அவர் மறைந்த நடிகர் என் டி ராமாராவின் மகன் என்பதும் ஒரு காரணம்.

இப்படிப்பட்ட பாலகிருஷ்ணா அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சமீபத்தில் ஒரு சினிமா நிகழ்ச்சியில் நடிகை அஞ்சலியை அவர் பிடித்துத் தள்ளியது சர்ச்சைகளைக் கிளப்பியது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானை அவமதிக்கும் விதமாக இவர் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவரின் மகன் மோஷாங்கா தேஜா பிரசாந்த் வர்மா இயக்கும் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அவரை வாழ்த்தியுள்ளது.