என் படத்தின் ஹீரோ அவர்தான்… இயக்குனர் வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!
தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் இப்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்கும் முடிவுக்கு வந்துள்ளார். அந்த வரிசையில் தற்போது அமரன் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் இரு படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து அவர் சிபி சக்ரவர்த்தி மற்றும் சுதா கொங்கரா ஆகியோர் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்காக அவர் ஒரு படம் நடிக்க உள்ளதாக முன்னர் தகவல் வெளிவந்தது. அந்த படம் சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக இருக்கும் என்றும், அதை வெங்கட் பிரபு இயக்குவார் என்றும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் கோட் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வெங்கட்பிரபுவிடம் அவரின் அடுத்த படம் குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர் “என்னுடைய அடுத்த படம் சிவகார்த்திகேயனுடன்தான். அவர் ஏற்கனவே நடிக்க ஒப்புக்கொண்ட படங்களை முடித்த பின்னர் என்னுடைய படத்தின் பணிகள் தொடங்கும்” எனக் கூறியுள்ளார்.