வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 14 பிப்ரவரி 2019 (20:02 IST)

நடிகர் ஆர்யா மருமகனாக வந்தது மகிழ்ச்சி - சாயிஷாவின் அம்மா பெருமிதம்

நடிகர் ஆர்யா நடிகை சாயிஷாவை வரும் மார்ச் மாதம் திருமணம் செய்கிறார்.இது குறித்து சென்ற வாரமெல்லாம் மீடியாக்களில் செய்தி வெளியான நிலையில், சமீபத்தில் நடிகர் ஆர்யா தன் டுவிட்டர் பக்கத்தில் இதை  உறுதிசெய்தார்.
இந்நிலையில் நடிகை சாயிஷா தன் டுவிட்டர் பக்கத்தில் இதை உறுதி செய்யும் விதமாக ஒரு டுவிட் பதிவிட்டார். இதனையடுத்து சாயிஷாவின் அம்மாவும் ஒரு ரீடுவிட் செய்தார்.
அதில்,’ வாழ்கையில் மிக அழகான தருணம் இது. எங்கள் குடும்பத்திற்கு மருமகனாக ஆர்யாவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். என் மகள் சாயிஷாவுக்கு என் ஆசீர்வாதங்கள் இவ்வாறு தெரிவித்திருந்தார்.’
 
மேலும் அவர் தான் டுவிட் செய்ததுடன் மட்டுமல்லாமல் மருமகன் ஆர்யாவுக்கு வந்த வாழ்த்துக்களுக்கும் சேர்த்து அவர் ரீடுவிட் செய்து வருகிறார். இதற்கு நண்பர்கள், திரையுலக பிரபலங்கள், உட்பட  பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.