செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 7 ஜூன் 2020 (17:08 IST)

நடிகர் அர்ஜூனின் உறவினர் திடீர் மரணம்: அதிர்ச்சியில் கன்னட திரையுலகம்

நடிகர் அர்ஜூனின்  உறவினர் திடீர் மரணம்
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என அறியப்பட்ட நடிகர் அர்ஜுன் என்பது அனைவரும் அறிந்ததே. இவரது உறவினர் சிரஞ்சீவி சர்ஜா என்பவர் கன்னட திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் ஆவார். இந்த ஆண்டு மட்டும் அவர் 8 படங்களில் நடித்துக் கொண்டிருந்தார் என்பதும் அவற்றில் நான்கு படங்கள் வெளியாகிவிட்டன என்பதும், நான்கு படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
லாக்டவுன் முடிந்தவுடன் இந்த படங்களின் அடுத்த கட்ட பணிகள் தொடங்க இருந்த நிலையில் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா திடீரென மரணம் அடைந்துவிட்டது கன்னட திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 
நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பெங்களூர் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை கொடுத்துக் கொண்டிருக்கும்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக அவர் மரணமடைந்துவிட்டதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளனர்
 
மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவுக்கு 39 வயது என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு மேக்னா ராஜ் என்ற மனைவி உள்ளார். சிரஞ்சீவி சார்ஜாவின் மரணம் குறித்த செய்தி அறிந்ததும் கன்னட திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது