திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : புதன், 30 ஆகஸ்ட் 2017 (15:45 IST)

ஆரவ்வின் காதலை பற்றி கேள்விகளால் துளைத்தெடுத்த ஆர்த்தி மற்றும் காஜல் - ப்ரொமோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜுலி மற்றும் ஆர்த்தியின் ரீ எண்ட்ரிக்கு பிறகு நிகழ்ச்சி சூடு பிடிக்க தொடங்கி விட்டது. பிக்பாஸ்  கட்டளைப்படி, வீட்டிற்குள் இருப்பவர்கள் என்.ஆர்.ஐ குடும்பம், மதுரை குடும்பம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.
 
 
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் ஆரவ், ஓவியா காதல் கதை பற்றிதான் அதிக பேச்சாக உள்ளது. நிகழ்ச்சியின் மூலம் ஆரவ்வை காதலித்த ஓவியா சில பிரச்சனைகளால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார்.
 
தற்போது புதிதாக வந்துள்ள புரொமோவில், ஆர்த்தி மற்றும் காஜல் இருவரும் ஆரவ்விடம் ஓவியா பற்றி கேட்கின்றனர். 100  நாட்கள் நிகழ்ச்சியில ஜெயிச்சு முடிந்த பிறகு ஓவியா உங்க முன்னால நின்னா எப்படி உணர்வீங்க? ஓவியா உங்களை சந்தித்து காதலை வெளிப்படுத்தினால் ஏற்பீர்களா? என ஆர்த்தியும், பெற்றோர்கள் சம்மதித்தால் நீங்கள் ஓவியாவிற்கு ஓகே  சொல்வீர்களா? என்று காஜலும் மாறுமாறி கேள்வி கேட்கின்றனர்.
 
அதற்கு ஆரவ் என்னவாக இருக்கும். ஓவியாவின் காதலை ஏற்பாரா? என்பது இன்றைய நிகழ்ச்சியை காணும்வரை  காத்திருப்போம்.