என்னை வைத்து என் அப்பா ஒரு படம் கூட தயாரித்ததில்லை… வாரிசு அரசியல் பற்றி பேசிய அபிஷேக் பச்சன்!
பாலிவுட்டில் இப்போது வாரிசு அரசியல் மிகப்பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் நடிகர் அபிஷேக் பச்சன் அதுகுறித்து தெரிவித்துள்ளார்.
சுஷாந்த் மரணத்துக்குப் பிறகு பாலிவுட்டில் வாரிசு அரசியல் பற்றிய விவாதம் நீண்ட நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. இதனால் அபிஷேக் பச்சன் போன்ற நடிகர்களும் அந்த விமர்சனத்தில் சிக்கியுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அபிஷேக் பச்சன் அப்பா எனக்காக யாரிடமும் பேசியதில்லை. என்னை வைத்துப் படம் கூட தயாரித்ததில்லை. ஆனால் நான் அவரை வைத்து பா படத்தைத் தயாரித்தேன். நீங்கள் நடிக்கும் படம் ரசிகர்களுக்கு உங்களைப் பிடிக்கவில்லையென்றால் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை. அதுதான் கசப்பான உண்மை.
ஆனால் எல்லோரும் என்னை அமிதாப்பின் மகன். பிறக்கும் போதே செல்வ செழிப்போடு பிறந்தவர்கள் என்பார்கள். ஆனால் நான் எத்தனை படங்களில் மாற்றப்பட்டு இருக்கிறேன், முதலீடு இல்லாமல் என் படங்கள் எத்தனை நிறுத்தப்பட்டுள்ளன என்பது எனக்கு மட்டும்தான் தெரியும் எனக் கூறியுள்ளார்.