ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (07:21 IST)

ஷங்கர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் மோதல்… இந்த படம்தான் காரணமா?

சில நாட்களாக தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் இயக்குனர் ஷங்கருக்கும் இடையே கடிதம் மூலமாக மோதல் நடந்து வருகிறது.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த அந்நியன் திரைப்படம் விரைவில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ள நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் தன்னுடைய அனுமதி இல்லாமல் ரீமேக் செய்ய கூடாது என ஷங்கருக்கு இமெயில் அனுப்பி இருந்தார். அதையடுத்து அவருக்கு ஷங்கர் ரவிச்சந்திரன் பதிலனுப்பி அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இருவரும் இணைந்து அந்நியன் மற்றும் ஐ ஆகிய படங்களில் பணிபுரிந்திருந்த நிலையில் இப்போது காரசாரமாக மோதிக் கொள்வதற்கு காரணம் ஐ படத்தில் தயாரிப்பாளருக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதற்குக் காரணம் இயக்குனர் ஷங்கர்தான் என்பதாலும்தான் அவர் ஷங்கர் மேல் கோபமாக இருக்கிறாராம்.