செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: செவ்வாய், 27 ஜூலை 2021 (10:55 IST)

தமிழுக்கு வரும் தெலுங்கு முன்னணி ‘ஆஹா’ ஓடிடி!

தெலுங்கின் முன்னணி ஓடிடி நிறுவனமாக இருந்து ஆஹா ஓடிடி முதல் முறையாக தமிழ் படங்களை வாங்க பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்பட்டுகிறது.

தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸும், மை ஹோம் குரூப்பும் இணைந்து ஆஹா என்ற ஓடிடியை நடத்தி வருகின்றனர். இவர்கள் தெலுங்கு படங்களை வெளியிட்டு வந்த நிலையில் இப்போது வெப் சீரிஸ்களையும் தயாரித்து வெளியிடுகின்றனர்.

அடுத்த கட்டமாக இப்போது தமிழ் படங்களை வாங்கி வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான சி வி குமார் இப்போது நான்குக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து வரும் நிலையில் அவரின் படங்களை வாங்கி வெளியிட உள்ளதாம்.