1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 21 டிசம்பர் 2024 (09:39 IST)

டி.ராஜேந்தர் வாய் இசையில் ‘கூலி’ படத்தில் பாடல்? - சர்ப்ரைஸ் கொடுத்த ப்ரோமோ வீடியோ!

Chikitu vibe

ரஜினிகாந்த் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி படத்திலிருந்து வெளியாகியுள்ள புதிய ப்ரோமோ ஒன்று ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

 

 

தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் கூலி. இந்த படத்தில் நாகர்ஜுனா, ஆமிர் கான், உப்பேந்த்ரா என அடுத்தடுத்து பல சினிமா லெஜண்டுகளும் இணைந்து வருவதால் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி கூலி படத்திலிருந்து ஒரு ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் பட இயக்குனர் டி.ராஜேந்தர் ஒரு நேர்காணலில் வாய் வழியாகவே பல இசைகளை இசைத்து காண்பிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் ரொம்ப பிரபலம்.
 

 

சிக்கிட்டு சிக்கிட்டு என்ற அந்த இசை வைபில் ஒரு ப்ரோமோ வெர்சனை தற்போது வெளியிட்டுள்ளனர். இதெப்படி இருக்கு? என கேட்டு வெளியாகியுள்ள இந்த ப்ரோமோவுக்கு பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் ஆக்‌ஷன் காட்சிகளில் வித்தியாசமான பாடல்களை பயன்படுத்துவது வழக்கம். அப்படியாக கூலி படத்தின் ஆக்‌ஷன் காட்சியில் டி.ராஜேந்தரின் இந்த ‘சிட்டுக்கு சிட்டுக்கு’ ஹம்மிங் பாடல் இடம்பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K