மருத்துவமனையில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்.. உடல்நிலை குறித்து மகன் விளக்கம்..!
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இன்று காலை உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி விட்டதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மான் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக லண்டனில் இருந்து சென்னை திரும்பியவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அவரது உடல்நலம் குறித்து மருத்துவரிடம் கேட்டு அறிந்து கொண்டனர்.
இந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் இருந்து ஏ.ஆர். ரஹ்மான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பி விட்டதாக அவரது மகன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
"என் தந்தைக்கு நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக உடல் சோர்வு ஏற்பட்டது. அதனால் சில வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டோம். அவர் நலமுடன் உள்ளார். ரசிகர்கள், குடும்பத்தினர், நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி," என்று தெரிவித்துள்ளார்.
Edited by Siva