1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (20:46 IST)

ஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம் - பிரபல தயாரிப்பாளர் எதிர்ப்பு !

எத்தனையோ பிரச்சனைக் கண்டு மீண்டு வந்த தமிழ் சினிமாவுக்கு இந்தக் கொரொனா காலத்தில் திரையரங்குகள் திறக்க வில்லை என்பதால் ஓடிடி தளங்களில் படத்தை ரிலீஸ் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், முன்னணி நடிகர்களின் படங்கள்கூட ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படுவதால் அதற்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நெட்பிளிக்ஸ்,அமேசான், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல்
வெளியானது.

இந்நிலையில்,  ஜீ பிளக்ஸில் வெளியாகவுள்ள முதல் படம் க/பெ ரணசிங்கம் ஆகும். இப்படம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி  வெளியாகவுள்ளது.

இப்படத்தை ஒருமுறை பார்க்க ஜீ பிளக்ஸுக்கு ரூ.199 செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

இதற்கு பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு படத்தைப் பார்க்க ரூ.199 கட்டணம் வசூலிப்பது மிக அதிகமானது எனவும் சந்தா தொகைக் கட்டி அமதம் இலவசமாகப் பார்க்க நமது பார்வையாளர்கள் தயாராகவுள்ளனர் எனத்  தெரிவித்துள்ளார்.