வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (12:15 IST)

கொஞ்சம் ஓவரா ஃபயர் விட்ட ரசிகர்கள்! பற்றி எரிந்த ஜூனியர் என்.டி.ஆர் கட் அவுட்!

Devara

இன்று ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ படம் வெளியாகியுள்ள நிலையில் கொண்டாட்டத்தின் போது கட் அவுட் தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

தெலுங்கு இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வெளியாகியுள்ள படம் தேவரா. இரண்டு பாகமாக தயாராகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் இன்று வெளியானது. இதில் ஜான்வி கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார்.

 

இன்று தேவரா வெளியான நிலையில் நேற்று முதலே ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட தொடங்கி விட்டனர். திரையரங்கம் ஒன்றில் ரசிகர்கள் ஆட்டை வெட்டி அந்த ரத்தத்தால் ஜூனியர் என்.டி.ஆர் பேனருக்கு அபிஷேகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

 

பெங்களூரில் உள்ள திரையரங்கம் ஒன்றில் ஜூனியர் என்.டி,ஆருக்கு வைக்கப்பட்ட கட் அவுட்டில் மின் விளக்குகள் அமைக்கப்பட்ட நிலையில் அதில் ஏற்பட்ட மின்கசிவால் கட் அவுட் தீப்பிடித்தது. நல்வாய்ப்பாக அதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

 

தற்போது மற்றுமொரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் கட் அவுட்டிற்கு தீபாராதனை காட்டியபோது தீப்பற்றியதாக தெரிகிறது. இதனால் கட் அவுட் மளமளவென தீப்பற்றிய நிலையில் அதை ரசிகர்கள் கூட்டமாக நின்று வீடியோ எடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆங்காங்கே நடக்கும் இந்த விபத்து சம்பவங்கள் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K