புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 28 ஜூலை 2021 (19:32 IST)

நடிகர் ஆர்யா மீது ரூ.71 லட்சம் மோசடி வழக்கு: இளம்பெண்ணால் பரபரப்பு!

பிரபல நடிகர் ஆர்யா மீது ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ரூபாய் 71 லட்சம் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சமீபத்தில் வெளியான சார்பாட்டா பரம்பரை உள்பட பல திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் ஆர்யா. இவர் மீது ஜெர்மனி நாட்டை சேர்ந்த வித்ஜா என்ற பெண்மணி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார்
 
தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி ரூபாய் 71 லட்சம் நடிகர் ஆர்யா மோசடி செய்ததாக அவர் இந்த வழக்கை பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இது குறித்து பதிலளிக்க சிபிசிஐடிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து சிபிசிஐடி கால அவகாசம் கேட்டதை அடுத்து இந்த வழக்கு ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது