1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By

ஓவியா-சிம்பு படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கோடிக்கணக்கானோர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை ஓவியா, அதன் பின்னர் ஒருசில கோலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார் அவ்வாறு அவர் நடித்து வரும் படங்களில் ஒன்று '96ml'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில் இந்த படத்தில் சிம்பு இசையமைக்கின்றார் என்ற தகவல் அவருடைய ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக விளங்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஓவியா நடித்து வெளிவரும் முதல் படம் இதுதான் என்று கூறப்படுவதால் சிம்பு இந்த படத்திற்காக ஸ்பெஷல் பாடல்களை கம்போஸ் செய்துள்ளதாக, இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
இந்த நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர்ட்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஓவியா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தை அழகிய அசுரா என்பவர் இயக்கி வருகிரார். இந்த படத்தை நிவிஜ் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது