1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 22 அக்டோபர் 2022 (19:18 IST)

ரஜினியின் சூப்பர் ஹிட் படம் வெளியாகி 35 ஆண்டுக்ள்...ஏவிஎம் டுவீட்

manithan
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மனிதன் படம் வெளியாகி 35 ஆண்டுகள் ஆகியுள்ளதாக ஏவிஎம் தயாரிப்பு  நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

தமிழ் சினிமாவின் பாரம்பரியமிக்க சினிமா தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம். இந்த   நிறுவனம் பராசக்தி, அன்பே வா, உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது.

கடந்த 1987 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான படம் மனிதன். இப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்திருந்தார்.

இப்படம் வெளியாகி இன்றுடன் 35 ஆண்டுகள் ஆவதையொட்டி இன்று ஏவிஎம் நிறுவனம் தன் டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ளது. இந்த டிவிட்டில் வீடியோவும் வைரலாகி வருகிறது.

Edited by Sinoj