வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 7 ஜனவரி 2020 (21:50 IST)

30 வயது இளம் இயக்குனர் விபத்தில் பலி: திரையுலகினர் அதிர்ச்சி

30 வயது இளம் இயக்குனர் ஒருவர் பைக்கில் தனது மனைவியுடன் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி பலியான சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது
 
கமலஹாசன் நடித்த பாபநாசம், கார்த்தி நடித்த தம்பி உள்பட பல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களை இயக்கிய ஜீத்து ஜோசப் அவர்களிடம் உதவியாளராக இருந்து அதன் பின்னர் ’ஒருமையில் ஒரு சிஸ்ரம்’என்ற மலையாள படத்தை இயக்கியவர் ஆரியன் விவேக். இவர் சமீபத்தில் தனது மனைவியுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஒரு நாய் குறுக்கே வந்ததால் விபத்தில் சிக்கினார்
 
இந்த விபத்தில் ஆரியம் விவேக் மற்றும் அவரது மனைவி அமிர்தா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து இருவரும் கொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஆர்யன் விவேக் நேற்று பரிதாபமாக பலியானார். அவரது மனைவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
 
வளர்ந்துவரும் ஒரு இயக்குனர் விபத்தில் மரணமடைந்தது மலையாள திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது