திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 4 ஜனவரி 2020 (15:40 IST)

தனுஷை நான்காவது முறையாக இயக்கும் இயக்குனர் – சன் பிக்சர்ஸோடு கூட்டணி !

தனுஷ் நடிக்கும் அவரது  44 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்க இருக்கிறார்.

நடிகர் தனுஷ் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 40 ஆவது படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இது அவரது 41 ஆவது படமாகும். 42 ஆவது படத்தை செல்வராகவனும். 43 ஆவது படத்தை ராம்குமாரும் இயக்க உள்ளனர்.

அதற்கடுத்ததாக தனுஷ் நடிக்கும் 44 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் கதை திரைக்கதை வசனம் ஆகிய பொறுப்புகளை தனுஷே மேற்கொள்கிறார். இந்த படத்தை இயக்கும் பொறுப்பு மித்ரன் ஆர் ஜவஹருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே தனுஷை வைத்து யாரடி நீ மோகினி குட்டி, உத்தம புத்திரன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் எனத் தெரிகிறது.