புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (10:33 IST)

முதல் நாள் முதல் காட்சி… 20 லட்சம் பேர் ஆர்வம் – வலிமை படைத்த சாதனை!

வலிமை திரைப்படத்தின் முதல் நாள் காட்சியை பார்க்க 20 லட்சம் பேர் ஆர்வமாக உள்ளதாக ஒரு இணையதளத்தில் தெரிவித்துள்ளனர்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாக உள்ளது. கடைசியாக அஜித்தின் நேர்கொண்ட பார்வை வெளியாகி இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் வெளியாகிறது. அஜித் என்னை அறிந்தால் படத்துக்குப் பிறகு போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதுவரை அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்த எந்த படமும் பெரிய வெற்றி பெற்றதில்லை என்பதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் புக் மை ஷோ என்ற டிக்கெட் புக் செய்யும் இணையதளத்தில் இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ஆர்வமாக இருப்பதாக 20 லட்சம் பேர் தெரிவித்துள்ளனர். இதுவரை எந்தவொரு தமிழ்ப் படத்துக்கும் இத்தனைப் பேர் ஆர்வம் தெரிவித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.