திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 29 நவம்பர் 2018 (18:25 IST)

2.0 டிவிட்டர் விமர்சனம்: ரசிகர்களின் பாராட்டு மழையில் சங்கர் அண்ட் டீம்

லைகா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ,அக்ஷய் குமார் , எமிஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 2.o.


இன்று அதிகாலை தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில்  2.0 படம் வெளியானது. திரையரங்குகளில் அதிகாலையிலேயே குவிந்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் படத்தை பார்த்து ரசித்து வருகிறார்கள். 2.o படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து டுவிட்டரில் பல்வேறு ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

ஒரு ரசிகர் பதிவிட்டுள்ள கருத்தில் "ஷங்கர் சார் உங்களால் மட்டும் எப்படி இப்படியொரு கதையை கதையை யோசிக்க முடிகிறது. உங்களது கிரியேட்டிவிட்டியை கண்டு வியக்கிறேன். அற்புதமான இந்த படத்தால் உலகத்தில் நாம் வரலாறு படைக்கப் போகிறோம். நீங்கள் 3.o இயக்க வேண்டும்"  என தெரிவித்துள்ளார். 
இன்னொரு ரசிகர் அதிகாலை ஐந்தரை மணிக்கே படத்தை பாதி. பார்த்துவிட்டு ஒரு கருத்தைச் சொல்லியுள்ளார் அதில் "என்ன ஒரு அற்புதமான வீடியோ மேக்கிங், 3டி தொழில்நுட்பத்தில் பார்ப்பதற்கு சிறப்பாக உள்ளது. இரண்டாவது பாதி எப்படி இருக்கும் என்பதை பார்க்க மிக ஆர்வத்தை தூண்டுகிறது " என தெரிவித்துள்ளார்.  
 
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து ஒரு ரசிகர் 2.o படத்தை பார்த்துவிட்டு வெகுவாக புகழ்ந்துள்ளார் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டில் புதிய வரலாறு படைக்கும் என அவர் பாராட்டியுள்ளார்.
இதேபோல் பல்வேறு ரசிகர்கள் ட்விட்டரில் இருந்தா படத்தை வெகுவாக பாராட்டி கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள் அவற்றில் சில உங்கள் பார்வைக்காக...