2.0 ட்ரைலர் வெளியீடு : விழாக்கோலமாக மாறிய சத்யம் தியேட்டர்..!
2.0 படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் சினிமாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஷங்கர், ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
2.0 படத்தின் 4டி எஸ்.ஆர்.எல். டீசர் போட்டுக்காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்துள்ள அனைவருக்கும் 3டி கண்ணாடிகள் கொடுக்கப்பட்டது. டீஸர் துவங்கியபோது ஒலி சரியாக கேட்கவில்லை. பிறகு இயக்குனர் ஷங்கர் மீண்டும் திரையிட சொல்லி கோரிக்கை வைத்ததால் மறுபடியும் ட்ரைலர் வெளியிடப்பட்டது.
3டி ட்ரைலர் 4டி சவுண்டுடன் கேட்டவர்கள் மெய் சிலிர்த்தனர். தியேட்டர்களில் பார்வையாளர்களின் கால்களுக்கு அடியில் ஸ்பீக்கர் வைக்கப்பட்டு 4 டி அனுபவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றார் ஷங்கர்.
இந்த 4டி சவுண்டில் 2.0 படத்தை வெளியிட வேண்டும் என்பது தனது நான்கு ஆண்டு கனவு என்று ஷங்கர் நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் இத்திரைப்படம் உருவாகியுள்ளதால், இந்திய மீடியாக்கள் சத்யம் திரையங்கில் குவிந்திருக்கிறார்கள். ரஜினிகாந்த், அக்ஷய்குமார், ஷங்கர் உள்ளிட்ட குழுவினர் சத்யம் திரையரங்கிற்கு வந்திருக்கிறார்கள். சிறப்பு விருந்தினர்களுக்கு பலூன் கொடுத்து வரவேற்கப்பட்டது.
இதன் ட்ரைலர் இன்று பகல் 12 மணிக்கு இணையதளங்களில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.