புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 30 நவம்பர் 2018 (07:40 IST)

முதல் நாள் வசூல்: சர்காரை முறியடித்த '2.0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரஜினியை பிடிக்காதவர்கள் கூட இந்த படத்தை பாராட்டியதுதான் பெரும் ஆச்சரியம்

இந்த நிலையில் நேற்று சோலோவாக வெளிவந்த இந்த படம் சென்னை வசூலில் சாதனை புரிந்தது. கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி அனைத்து சாதனைகளையும் முறியடித்த 'சர்கார்' வசூலின் சாதனையை '2.0' முறியடித்துள்ளது.

'2.0' நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் ரூ.2.64 கோடி வசூல் செய்துள்ளது. சர்கார் ரூ.2.37 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. 'சர்கார்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது என்பதும் '2.0' சாதாரண வேலை நாளில் வெளிவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழக, இந்திய, உலக வசூல் குறித்த தகவல்கள் இன்னும் சில நிமிடங்களில் வெளிவரவுள்ளது. அந்த தகவல்களும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை