செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 11 டிசம்பர் 2017 (22:35 IST)

சென்னையில் நடைபெறும் 15வது சர்வதேச திரைப்பட விழா

15-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா சென்னையில் கலைவாணர் அரங்கில் வருகிற டிசம்பர் 14ல் தொடங்கி 21ல்  முடிவடைகிறது.
இண்டோசினி அப்ரிசியேஷன் சார்பில் சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் வழங்கும் 15-வது சர்வதேச சென்னை  திரைப்படவிழா வரும் டிசம்பர் 14 முதல் டிசம்பர் 21 வரை சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் 50 நாடுகளில் இருந்து 150 படங்கள் திரையிடப்படுகின்றன.
 
இந்த ஆண்டின் சிறந்த படத்திற்கான தமிழ்ப் படங்கள் போட்டி பிரிவில் 12 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் அறம், கடுகு, குரங்கு பொம்மை, மாநகரம், மகளிர் மட்டும், மனுசங்கடா, ஒரு கிடாயின் கருணை மனு, ஒரு குப்பை கதை, தரமணி,  துப்பறிவாளன் ஆகிய 12 படங்கள் பங்கேற்கின்றன. இதன் தொடக்க விழா 14-ந்தேதி மாலை 6.15 மணிக்கு கலைவாணர் அரங்கில்  நடக்கிறது.