திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 14 ஆகஸ்ட் 2021 (15:42 IST)

மூன்று நாள் காக்கவைத்த விஜய் சேதுபதி… காதலருக்காக பொறுத்துக் கொண்ட நயன்தாரா!

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ஏகப்பட்ட படங்களில் காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் ஒன்று.

விஜய் சேதுபதி இப்போது 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனால் தன் தேதிகளை ஐந்து நாள் 10 நாள் என பிச்சி பிச்சி இயக்குனர்களுக்குக் கொடுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த திண்டுக்கல்லில் நடந்த பொன்ராம் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். ஆனால் இயக்குனரோ கூடுதலாக மூன்று நாட்கள் கொடுத்தால் அங்கு நடக்கும் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிடுவேன் எனக் கூறி விட்டாராம்.

அதற்கு சம்மதித்து அவரும் நடித்து கொடுத்துள்ளார். ஆனால் அந்த மூன்று நாட்கள் அவர் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டியதுதான். இதற்காக சென்னை வந்திருந்த நயன்தாரா தனது காதலரின் படம் என்பதால் பொறுமையாக இருந்து நடித்துக் கொடுத்துள்ளாராம்.

Source வலைப்பேச்சு