செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala
Last Updated : புதன், 24 ஆகஸ்ட் 2022 (15:42 IST)

சுவையான இனிப்பு பூரணம் கொழுக்கட்டை செய்ய !!

Sweet Puranam Kozhukattai
தேவையான பொருட்கள்:

வெள்ளை எள் - 1 கப்
வெல்லம் பொடித்தது - 1 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்



மேல் மாவு செய்ய:

ஒரு வாணலியில் அரிசி மாவைப்போட்டு, வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும். 4 கப் தண்ணீரில், உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு கொதிக்க  விடவும். கொதித்த நீரை, அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, ஒரு கரண்டி காம்பால் கிளறி விடவும். சிறிது நேரம் அப்படியே வைத்திருந்து, கை  பொறுக்கும் சூடு வந்தவுடன், நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

பூரணம் செய்ய:

ஒரு வாணலியில் எள்ளைப் போட்டு, சிவக்க வறுத்துக் கொள்ளவும். சற்று ஆறியவுடன், மிக்ஸியி8ல் போட்டு பொடிக்கவும். பின்னர் அதிலேயே  வெல்லத்தூளைப்போட்டு ஒன்று அல்லது இரண்டு சுற்று ஓட விடவும். எள்ளும், வெல்லமும் ஒன்றாகக் கலந்தப்பின், வெளியே எடுத்து, அத்துடன் ஏலப்பொடி, மற்றும் நெய்யைச் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.

விரல்களில் எண்ணெய்த் தடவிக் கொண்டு, ஒரு எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, இரண்டு கை விரல்களாலும் உருண்டையைப் பிடித்துக் கொண்டு, கட்டை விரல்களால் உருண்டையின் நடுவே இலேசாக அழுத்திப் பிடித்துக் கொண்டு, மற்ற விரல்களைக் கொண்டு உருண்டையை அழுத்தி மாவை  விரிவடையச் செய்து, ஒரு சிறு கிண்ணம் போல் ஆக்கிக் கொள்ளவும். அதனுள், ஒரு டீஸ்பூன் பூரணத்தை வைத்து, மாவின் எல்லா ஓரத்தையும் ஒன்றாகச்  சேர்த்து, நடுவில் கொண்டு வந்து அழுத்தி விடவும். இதனை இட்லி தட்டில் சிறிது எண்ணெய்யைத் தடவி, அதில் வைத்து 5 முதல் 8 நிமிடங்கள் வரை ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். சுவையான பூரணம் கொழுக்கட்டை தயார்.