Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவை மிகுந்த ரவா கேசரி செய்ய !!

Written By Sasikala
Updated: செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (16:17 IST)
தண்ணீர் - 2 1/2 கப்
சர்க்கரை - 1 3/4 கப்
நெய் - 3/4 கப்
கேசரி கலர் - சிறிதளவு
ஏலப்பொடி - சிறிதளவு
முந்திரிப் பருப்பு - ஒரு கைப்பிடி
கிஸ்மிஸ் - 1 தேக்கரண்டி

செய்முறை:
 
அடுப்பில் வாணலியில் 2 தேக்கரண்டி நெய் விட்டு கிஸ்மிஸ், முந்திரியை நன்கு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். மீண்டும் 2 தேக்கரண்டிநெய் விட்டு ரவை வாசனை போகும் வரை சிவக்க வறுக்கவும்.
 
இரண்டரை கப் தண்னீரைச் சேர்த்து அடுப்பை நிதானமாக வைத்து நன்கு வேகவைக்கவும். ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை, கேசரி கலரைச் சேர்த்துக் கிளறவும். சர்க்கரையால் கலவை மீண்டும் தளரும்.
 
ஒட்டாமல் சேர்ந்து வரும்வரை இடையில் சிறிது சிறிதாக நெய் விட்டுக் கொண்டே கிளறவும். கேசரியை இறக்கும் முன் மிச்சமுள்ள நெய், ஏலப்பொடி தூவி  இறக்கவும்.
 
வறுத்து வைத்திருக்கும் கிஸ்மிஸ், முந்திரியைக் கலந்து கொள்ளவும். கேசரியை ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, மேலே மீதி கிஸ்மிஸ் முந்திரி தூவி,  வில்லைகள் போடலாம்.
 
குறிப்பு:
 
ரவையைச் சிவக்க வறுத்து காற்றுப்புகாத பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொண்டால் உப்புமா, கேசரி போன்றவற்றை விரைவில் செய்து முடிக்க வசதியாக இருக்கும், வறுத்து வைப்பதால் பூச்சிகளும் ரவையை அண்டாது.
 
கேசரி நிறமூட்டி மஞ்சள், சிவப்பு நிறங்களில் இருக்கும், சிறிதளவே பயன்படுத்த வேண்டும், அதிகம் போட்டால் கசந்து விடும், அதே போல் ரவையையும் பொன்னிறமாக வறுக்க வேண்டும், கருக விட்டால் கேசரி கசக்கும்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments