Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேழ்வரகு புட்டு செய்ய தெரியுமா...!

Written By Sasikala
Updated: திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (14:55 IST)
 
தேவையானவை:
 
கேழ்வரகு மாவு - ஒரு கப்
சர்க்கரை - தேவைக்கு
தேங்காய்ப்பூ - 2 டீஸ்பூன்
ஏலக்காய் - 1
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை:
 
* கேழ்வரகு மாவில் துளி உப்பு போட்டுக் கலந்து (உப்பு சேர்ப்பது சுவைக்காகத்தான்) தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு இரண்டு கைகளாலும் மாவைப் பிசறினார்போல் கிளறவும்.
 
* தண்ணீரைச் சேக்கும்போது கொஞ்சம் கவனமாகச் சேர்க்க வேண்டும். அதிகமாகிவிட்டால் மாவு புட்டுபோல் இல்லாமல் குழைந்துவிடும். தண்ணீர் குறைவாக இருந்தால் புட்டு வேகாமல் வெண்மையாக இருக்கும்.
 
* பிசைந்த மாவைக் மாவைக் கையில் எடுத்து பிடிகொழுக்கட்டைக்குப் பிடிப்பதுபோல் பிடித்தால் பிடிக்க வரவேண்டும். பிறகு  அதையே உதிர்த்தால் உதிரவும் வேண்டும்.இந்தப் பக்குவத்தில் மாவைப் பிசறிய பிறகு ஒரு 10 நிமிடம் மூடி வைக்கவும்.
 
* பிறகு எடுத்து கட்டிகளில்லாமல் உதிர்த்து விடவும். அதன்பிறகு இட்லி அவிப்பதுபோல் இட்லித் தட்டில் ஈரத்துணி போட்டு  மாவை வேக வைத்து எடுக்கவும்.
 
* ஆவி வெந்து வாசனை வந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி, உதிர்த்துவிட்டு தேங்காய்ப்பூ ,சர்க்கரை, ஏலத்தூள் சேர்த்துக்  கிளறிவிடவும். இப்போது சத்தான, சுவையான, இனிப்பான‌ கேழ்வரகு புட்டு சாப்பிடத் தயார்.

எல்லாம் காட்டு

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments