சுவை மிகுந்த ஜவ்வரிசி லட்டு செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
ஜவ்வரிசி - அரை கப்
வேர்க்கடலை - 2 ஸ்பூன்
பொட்டுக்கடலை - கால் கப்
முந்திரி, திராட்சை - 7q
ஏலக்காய் - 2
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை: 
 
முதலில் முந்திரிப்பருப்பை பொடியாக நறுக்கவும். ஏலக்காயை மற்றும் வெல்லத்தை பொடி செய்து கொள்ளவும். பிறகு வாணலியில் முதலில் ஜவ்வரிசியை போட்டு நன்கு பொரியும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் வேர்க்கடலை, பொட்டுக்கடலை அடுத்தடுத்து போட்டு வறுத்து எடுத்து எல்லாவற்றையும் ஆற வைக்கவும்.
பிறகு ஆறியதும் எடுத்து மிக்ஸியில் போட்டு பொடிச் செய்துக் கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு வறுத்து பொடித்த பொடியில் ஏலக்காய் தூள், வெல்லம், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து கொள்ளவும்.
 
நெய்யை காயவைத்து உருக்கி, ஜவ்வரிசி கலவையில் ஊற்றி கிளறவும். இந்த ஜவ்வரிசி கலவையை நன்கு பிசைந்து இளஞ்சூடான பதத்தில் இருக்கும்பொழுதே உருண்டைகளாக பிடித்து வைக்கவும். சுவை மிகுந்த ஜவ்வரிசி லட்டு தயார்.

எல்லாம் காட்டு

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

பஜ்ஜி, வடை, போண்டாவை பேப்பரில் வைத்து விற்பனை செய்யக்கூடாது!.. FSSAI உத்தரவு!..

தலைமுடி அடர்த்தியாக வளர என்ன செய்யலாம்?!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments