வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 16 ஜூலை 2020 (08:07 IST)

சிறப்பான சம்பவம் இருக்கு.... மாஸ்டர் ட்ரைலர் குறித்து விஜய் சேதுபதி!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் "மாஸ்டர்' படத்தில் நடித்து வருகிறார். கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். இவர்களோடு சாந்தனு பாக்யராஜும் , வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

மேலும் ஆன்ட்ரியா, 96 புகழ் கௌரி கிஷன் உள்ளிட்ட சிலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதியே வெளியாகவிருந்த இப்படம், கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விஜய் சேதுபதியிடம் மாஸ்டர் படத்தின் ட்ரைலர் குறித்து கேட்டதற்கு, " மாஸ்டர் படத்தோட ட்ரைலர் நான் பார்த்துட்டேன்.  மிகவும் நன்றாக வந்துள்ளது. இது கண்டிப்பாக தளபதி ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும்" என கூறி எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளார். மாஸ்டர் படம்  2021 பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.