செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. கிருஷ்ண ஜெயந்தி
Written By

வட இந்தியாவில் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஜென்மாஷ்டமி!

நாம் என்னவாக இருக்கிறோமோ அதன் படியே நமக்கு காட்சி தருபவர்தான் கிருஷ்ணர். கிருஷ்ண பரமாத்மாவை நம்பினால் நிச்சயம் வெற்றிதான். மனதால் கண்ணனை நினைத்தாலே நன்மைகள் தேடி வரும் என்பதற்கு பக்தர்களின் வாழ்க்கையில் பல்வேறு நல்ல திருப்பங்களை நிகழ்த்தியிருக்கிறார் கிருஷ்ணர்.
ராச லீலா மற்றும் தகி அண்டி என வட இந்தியாவில் சிறப்பாகக் இந்த விழா கொண்டாடப்படுகிறது. ராசலீலா என்பது கிருஷ்ணனின் இளமைக்கால வாழ்வை,  கோகுலத்தில் கோபியர்கள் எனப்படும் இளம்பெண்களுடன் விளையாடிய காதல் விளையாட்டுக்களை நடிப்பதாகும். 
 
மஹாராஷ்டிராவில் பிரபலமாக உள்ள தகி அண்டி என்பது உயரத்தில் தொங்க விடப்பட்டுள்ள வெண்ணைத்தாழியை சிறுவர்கள்  நாற்கூம்பு அமைத்து மேலேறி  அதனை உடைப்பதாகும்.
 
வீட்டின் நுழைவாயிலில் குழந்தை நடந்து வந்தது போன்ற பாதச்சுவட்டினை மாவால் பதியச் செய்ய வேண்டும். அதனையடுத்து கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அதனுடன் துளசி இருந்தால் இன்னும் சிறப்புவாய்ந்த ஒன்றாகும். அதனைதொடர்ந்து கிருஷ்ணருக்கு பிடித்த தயிர், வெண்ணை,  அவல் கண்டிப்பாக வைக்க வேண்டும்.
 
சீடை, முருக்கு, லட்டு போன்ற இனிப்பு உணவுகளையும்  வைக்கவேண்டும். முடிந்த அளவுக்கு பூஜையை மாலை 6.00 - 7.00மணிக்குள் செய்வது உத்தமம. நீ எனக்கு ஒரு இலையைக் கொடு, அல்லது பூவை கொடு ,இல்லை ஒரு பழத்தைக் கொடு,அதுவும் இல்லையென்றால் கொஞ்சம் தண்ணீர் கொடு, எதைக் கொடுத்தாலும் பக்தியோடு கொடு,சுத்தமான மனம் உள்ளவன் பக்தியோடு கொடுப்பதை நான் சாப்பிடுவேன் என்றார் கீதையில் கண்ணன். 
 
கிருஷ்ண ஜென்ம பூமியான மதுரா வாழ் மக்கள், கிருஷ்ண ஜெயந்தி அன்று இரவு முழுவதும் கண் விழித்திருந்து பூஜை செய்வார்கள். யமுனை நதியின் ஒரு கரையில் மதுராவும், மறு கரையில் கோகுலமும் அமைத்துள்ளது. அதனால், அன்று யமுனைக்கு ஆரத்தி காட்டி பூஜை செய்வார்கள்.
 
பாகுபாடு பாராமல் குழந்தை உள்ளம் படைத்த கண்ணனை வணங்கினால் வாழ்நாள் முழுவதும் கிருஷ்ணபரமாத்மா, தம் பக்தர்களை தன் கண்ணைபோல்  காப்பார். கண்ணனின் அருளாசியால் சகலநலங்களும் பெற்று வளமோடும் நலமோடும் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வோம்.