ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 7 ஜூன் 2017 (16:47 IST)

தோனிக்கு டஃப் கொடுத்த பந்துவீச்சாளர் இவர் தானாம்!!

இங்கிலாந்தில் விராட் கோலியில் தொண்டு நிறுவனம் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனவரும் கலந்து கொண்டனர். 


 
 
நிகழ்ச்சியின் போது தோனியிடம், கேள்வி எழுப்பட்டது. அது என்னவெனில், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நீங்கள் எதிர்கொண்ட பந்துவீச்சாளர்களில் மிகவும் கடினமான பந்து வீச்சாளர் யார்? என கேட்கப்பட்டது. 
 
இதற்கு பதிலளித்த தோனி, எனக்கு உள்ள குறைந்த அளவு நுணுக்கங்களை வைத்து பார்க்கும் போது அனைத்து வேகப்பந்து பந்துவீச்சாளர்களும் சவாலானவர்கள்தான். 
 
இதையும் மீறி ஒருவரை குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், ஷோயப் அக்தரைத்தான் குறிப்பிடுவேன். அவர் அதிவேகமாக பந்து வீசக் கூடியவர். அவரால் யார்கர், பவுன்சர் பந்தையும் வீசுவார். ஆனால், பீமர் பந்தை அவரிடம் எதிர்பார்க்க முடியாது. அக்தரின் பந்து வீச்சை கணிப்பது கடினம் என்றார் தோனி.