உலக அரங்கில் இனிமேல் ’கோலி சாம்ராஜ்யம் ’தொடரும் : கும்ளே பெருமிதம்
அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு கோலி தலைமையிலான இந்திய அணி உலக கிரிக்கெட் அரங்கில் ஆதிக்கம் செலுத்தும் என்று முன்னாள் கேப்டன் கும்ளே கூறியுள்ளார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.
இப்போட்டியில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முதலாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
இதுபற்றி கும்ளே கருத்து கூறியதாவது :
இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வெல்லும் என கணித்தோம். அது போலவே 2-1 என தொடரை கைப்பற்றியது. பவுலிங் மற்றும் பேட்டிங் இரண்டிலுமே பட்டியக் கிளப்பினர்.
இப்போது உள்ள நம் இந்திய அணி அடுத்த ஆறு ஆண்டுக்கு உலக கிரிக்கெட்டில் பலத்த ஆதிக்கம் செலுத்தும் திறன் பெற்றுவிட்டது.இளம் வீரர்களும் இவர்களுடன் இணைய உள்ளனர். அதனால் இன்னும் நம் இந்திய அணி பலம் பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.