புதன், 27 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 21 செப்டம்பர் 2019 (09:55 IST)

ஐபிஎல் உரிமையாளர்கள் கொடுக்கும் அழுத்தம்… இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் வர மறுக்கக் காரணம் – அப்ரிடி புகார் !

இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் வர மறுப்பதற்கு ஐபிஎல் உரிமையாளர்கள்தான் காரணம் என ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை வீரர்கள் மேல் தாக்குதல் நடைபெற்றது. அதைக் காரணம் காட்டி உலக நாடுகள் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல் இருந்து வந்தன. இந்நிலையில் இப்போது பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒத்துக்கொண்டு அதற்கான அட்டவணையும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் கடைசிக் கட்டத்தில் 10 முக்கிய இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுத்துள்ளனர். இந்நிலையில் இலங்கை வீரர்கள் இந்தியா வர மறுப்பதற்கு இந்தியாதான் காரணம் என பாகிஸ்தான் அமைச்சர் கூறியது சர்ச்சைகளைக் கிளப்பியது. இப்போது அதேக் கருத்தை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடியும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் சஜ் சாதிக் அப்ரிடி கூறியதாக ’இலங்கை வீரர்கள் பலர் ஐபிஎல் நெருக்கடியில் உள்ளனர். கடந்த ஆண்டு இலங்கை வீரர்கள் பலரிடம் பேசி, பாகிஸ்தானில் நடக்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பங்கேற்க வாருங்கள் என்றேன். அவர்களுக்கு வர சம்மதம் இருந்தும் ஐபிஎல் உரிமையாளர்கள் நெருக்கடியால் வரமுடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் இலங்கையை எப்போதும் பாகிஸ்தான் ஆதரிக்கும்.’ எனத் தெரிவித்துள்ளார்.