வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 23 மார்ச் 2022 (15:38 IST)

அடுத்த கேப்டன்… இந்த 3 வீரர்களை பிசிசிஐ உன்னிப்பாக கவனிக்கிறது- ரவி சாஸ்திரி!

ஐபிஎல் தொடரில் கேப்டன்களாக நியமிக்கப்பட்டு வரும் மூன்று வீரர்களை பிசிசிஐ உன்னிப்பாக கவனிக்கும் என ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

இம்மாத இறுதியில் ஐபிஎல் 2022 தொடர் தொடங்க உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முழு தொடரும் இந்தியாவில் நடக்க உள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் கேப்டன்களாக செயல்படும் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர்களை பிசிசிஐ உன்னிப்பாக கவனிக்கும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

அதில் ‘நீண்ட காலத்துக்கு செயல்பட கூடிய கேப்டன் இந்திய அணிக்கு தேவைப்படுகிறது. அதனால் இந்த மூன்று வீரர்களின் செயல்பாடுகளை பிசிசிஐ கவனிக்கும்’ எனக் கூறியுள்ளார். இந்திய அணிக்கு புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு இப்போதே 35 வயது ஆகிவிட்டதால் அவரால் நீண்ட காலத்துக்கு கேப்டனாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.