ஒருநாள் அணியில் இடம்பிடித்த ரெய்னா களத்தில் விளையாடுவாரா?
தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் ரெய்னா இடம்பிடித்துள்ளார்.
இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடர் முடிந்து தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
நாளை மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இதில் ரெய்னா வெகு நாட்கள் கழித்து ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டி20 தொடரில் இடம்பிடித்த ரெய்னா தற்போது ஒருநாள் போட்டியிலும் இடம்பிடித்துள்ளார்.
மனிஷ் பாண்டே காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போடியில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதில் ரெய்னா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மனிஷ் பாண்டே அணியில் இடம்பிடித்தாலும் முதல் இரண்டு போட்டிகளில் களத்தில் விளையாடவில்லை. இதனால் ரெய்னா ஒருநாள் போட்டி அணியில் சேர்க்கப்பட்டாலும் களத்தில் விளையாடுவாரா? என்பது சந்தேகம் தான்.