தோனி - ஸ்மித் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்ட புனே அணி உரிமையாளர்!!
ஐபிஎல் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னமும் சில ரசிகர்கள் ஐபிஎல் ஆதிக்கதில் இருந்து வெளிவரவில்லை.
இந்நிலையில் ஐபிஎல் பைனலில் புனே அணி தோல்வியடைந்தது. இது குறித்து புனே அணி உரிமையாளரின் சகோதரர் ஹர்ஷ் கோயங்கா டிவிட் செய்துள்ளார்.
அதில்,லாரல்-ஹார்டி, ஜெய்-வீரு, ஸ்மித்-தோனி என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஹாலிவுட், பாலிவுட் ஜோடிகள் வரிசையில் ஸ்மித் தோனி ஜோடி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இந்த பதிவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது புகழ்வது போல் இருந்தாலும், ஜெய் - வீரு இந்தி திரைப்படமான ஷோலேயில் வரும் கதாப்பாத்திரங்களாகும். இந்த படத்தில் இருவரும் திருடர்களாக இருப்பார்கள்.
கோயங்காவின் டிவிட்டுகள் எப்போதுமே உள்நோக்கம் கொண்டதால், ஸ்மித் மற்றும் தோனி அணியின் பணத்தை வீண் செய்துவிட்ட திருடர்கள் என திட்டினாரா என்பது போன்ற கோனத்தில் ரசிகர்கள் யோசிக்க துவங்கியுள்ளனர்.