வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 28 நவம்பர் 2020 (17:09 IST)

மாரடோனாவுக்கு கேரளாவில் அருங்காட்சியம் –விடுதி உரிமையாளர் அறிவிப்பு!

கால்பந்து ஜாம்பவான் டியாகோ மாரடோனா கேரளா வந்திருந்த போது தங்கிய அறையை அருங்காட்சியமாக மாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாரடோனா மறைவு அவரது உலகம் முழுவதும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மூளை அறுவை சிகிச்சைக்காக அர்ஜென்டினா தலைநகரில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிந்து குணமாகி அவர் வீடு திரும்பிய நிலையில் திடீரென சமீபத்தில் அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

அவரது மறைவை உலகம் உள்ள அவரது ரசிகர்கள் ஆழ்ந்த வருத்தத்துடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் 2012 ஆம் ஆண்டு அவர் இந்தியா வந்த போது கேரளாவில் ஒரு தனியார் விடுதியில் தங்கினார். அப்போது முதல் அவர் பயன்படுத்திய பொருட்கள் எல்லாம் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இப்போது அவரது மறைவை ஒட்டி அந்த அறையை அருங்காட்சியமாக மாற்ற உள்ளதாக அந்த விடுதியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.