புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 8 அக்டோபர் 2020 (10:53 IST)

தோனியைக் காப்பாற்றிய கேதார் ஜாதவ்…. இப்படி ஒரு டெஸ்ட் இன்னிங்ஸா?

நேற்றைய போட்டியில் தோனி மற்றும் கேதார் ஜாதவ்வின் மந்தமான ஆட்டத்தால் எளிதாக வெல்ல வேண்டிய போட்டியை சிஎஸ்கே அணி பரிதாபமாக தோற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் மிகவும் பரிதாபகரமான தோல்வியை அடைந்தது. இத்தனைக்கும் தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை அளித்து சென்றனர். ஆனால் 12 ஆவது ஓவரில் இருந்து 15 ஓவர் வரை சுனில் நரேனின் பந்துவீச்சு போட்டியையே மாற்றியது.

தோல்விக்கு மிக முக்கியமானக் காரணமாக சொல்லப்படுவது கேதார் ஜாதவ்வின் டெஸ்ட் இன்னிங்ஸ்தான். இக்கட்டான நேரத்தில் இறங்கி ரன்களை சேர்க்க வேண்டிய நேரத்தில் அவர் 12 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதனால் கடுப்பான சிஎஸ்கே ரசிகர்கள் அவரைக் கண்டபடி திட்ட ஆரம்பித்துள்ளனர். ஆனால் இன்னும் ஒரு சிலரோ கேதார் ஜாதவ் மிகவும் மோசமாக விளையாடியதால் மோசமாக விளையாடிய தோனி (12 பந்துகளில் 11 ரன்கள்) ரசிகர்களின் விமர்சனங்களில் இருந்து தப்பிவிட்டார் என கருத்து தெரிவிக்கின்றனர்.