1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 9 ஆகஸ்ட் 2017 (20:32 IST)

விரக்தியில் ஜடேஜா: தடை குறித்து வருத்ததுடன் டிவிட்டர் போஸ்ட்!!

இந்தியா இலங்கை போட்டியிடும் மூன்றாவது டெஸ்டில் பங்கேற்க ரவிந்திர ஜடேஜாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.


 
 
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 
 
இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, 12 ஆம் தேதி  துவங்குகிறது. இதில் பங்கேற்க ரவிந்திர ஜடேஜாவுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. 
 
இதுகுறித்து ரவிந்திர ஜடேஜா தனது டுவிட்டர் பக்கத்தில், நான் நல்லவனாக இருக்க நினைக்கும் போது ஒட்டுமொத்த உலகமும் மோசமானதாக மாறிவிட்டது என பதிவிட்டுள்ளார்.
 
சமீபத்தில் வெளியிடப்பட்ட டெஸ்ட் தரவரிசையில் ரவிந்திர ஜடேஜா, பவுலர்களுக்கான தரவரிசையிலும், ஆல் ரவுண்டர்கள் தரவரிசையிலும் நம்பர் 1 இடத்துக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.