1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 23 ஜனவரி 2023 (09:41 IST)

பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி!

women junior
பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி!
19 வயதுக்குட்பட்ட பெண்கள் ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய போட்டியில் இலங்கை அணியை இந்தியா வீழ்த்தி உள்ளது. 
 
நேற்றைய போட்டியில் இந்திய மகளிர் அணி இலங்கையை எதிர்கொண்ட நிலையில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 59 ரன்கள் மட்டுமே எடுத்தது. 
 
இந்த நிலையில் 60 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி 7.2 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 60 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 
 
இந்த தொடரின் முதல் சுற்றில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய மகளிர் ஜூனியர் அணி தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது போட்டியில் வெற்றி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva