திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 14 பிப்ரவரி 2018 (07:04 IST)

தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணியின் சரித்திர சாதனை வெற்றி:

தென்னாப்பிரிக்காவில் இதுவரை ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றதே இல்லை என்ற மோசமான வரலாற்றை விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி நேற்று உடைத்தெறிந்தது. ஆம், நேற்றைய 5வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

போர்ட் எலிசபெத் நகரில் நேற்று நடைபெற்ற 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 274 ரன்கள் குவித்தது. கடந்த சில போட்டிகளில் ரன் அடிக்காமல் திணறிய ரோஹித் சர்மா நேற்று சதமடித்தார்

275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 42.2 ஓவர்களில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குல்தீப் யாதவ் மிக அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.