1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 5 மார்ச் 2022 (10:28 IST)

இரண்டாம் நாளும் தொடரும் அதிரடியான பேட்டிங்… சதத்தை நெருங்கும் ஜடேஜா!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்து வருகிறது.

இந்தியா மற்றும் இலங்கை இடையே முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று மொகாலியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்துள்ளது. நேற்றைய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மிக அபாரமாக விளையாடி 96 ரன்கள் சேர்த்தார்.  விஹாரி 58 ரன்களும் விராட் கோலி 45 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் களத்தில் உள்ளனர். இந்திய அணி நேற்று ஓவருக்கு ரன்கள் வீதம் சேர்த்து அதிரடியாக விளையாடியது.

இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கி நடந்து வரும் நிலையில் துரிதமாக ரன்களை சேர்த்து வருகிறது. அரைசதத்தைக் கடந்த ஜடேஜா இப்போது சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார். தற்போது வரை இந்திய அணி 397 ரன்கள் சேர்த்துள்ளது. ஜடேஜா 72 ரன்களோடு களத்தில் உள்ளார்.