நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: தொடரை வென்றது இந்திய ஏ அணி!
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: தொடரை வென்றது இந்திய ஏ அணி!
இந்திய ஏ அணி மற்றும் நியூசிலாந்து ஏ அணி ஆகியவற்றுக்கு இடையே ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்ற நிலையில் இந்த தொடரில் 3-0 என்ற கணக்கில் முழுமையாக இந்திய ஏ அணி வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய ஏ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதேபோல் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய ஏ அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது
இந்த நிலையில் இன்று 3வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இந்திய ஏ அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய போட்டியில் இந்திய ஏ அணி முதலில் பேட்டிங் செய்த 284 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்து அணி 178 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது இதனை அடுத்து இந்திய ஏ அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய போட்டியில் திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் அரைசதங்கள் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது