புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 20 ஏப்ரல் 2022 (17:22 IST)

பிரபல டென்னிஸ் வீராங்கனை கர்ப்பம்....வைரலாகும் புகைப்படம்

Maria Sharapova
பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

டென்னிஸ் விளையாட்டி மிகச்சிறந்த வீராங்கனையாகவும் பல கோடி ரசிகர்களைக் கவர்ந்தவருமான ரஷ்யா வீராங்கனை மரியா ஷரபோவா கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் தொழிலதிபர் அலெக்சாண்டர் கில்க்ஸ்     - என்பவரை காதலித்து வந்த நிலையில்  2020 ஆண்டு இருவரும்  திருமபம் செய்துகொண்டனர்.

திருமணம் முடிந்த பின் மரியா ஷரபோவா தான் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

 நேற்று தன் 35 வது பிறந்த நாளை கொண்டாடிய ஷரரபோவா தனது இன்ஸ்டாகிராம் பக்கதிதில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், இரண்டு பேருக்கும் சேர்த்து  நான் கேக் உண்கிறேன் என மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

ஷரபோவா டென்னிஷ் தொடரில், 4 கிராண்ட்ஷலாம் கோப்பைகள் வென்று சாதித்துள்ளார்.