வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 3 ஜூன் 2019 (16:31 IST)

டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் – வெற்றிக்கணக்கை தொடங்குமா பாகிஸ்தான் ?

உலகக்கோப்பையின் 6 ஆவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோத உள்ளன.

உலககோப்பை போட்டிகள் இந்த முறை கிரிக்கெட்டின் பிறப்பிடமான இங்கிலாந்தில் நடைபெறுகின்றன. இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகள் எதுவும் பரபரப்பில்லாமல் உப்புச்சப்பில்லாமல் முடிந்துள்ளன. இந்நிலையில் இன்று 6 ஆவது போட்டியாக இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

இதற்கு முன்னர் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவை 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதுபோல பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டிஸிடம் படுதோல்வி அடைந்துள்ளது. அதனால் இந்த போட்டியில் வெற்றிக்கணக்கைத் தொடங்கும் முனைப்பில் உள்ளது பாகிஸ்தான். சற்று முன்னர் போடப்பட்ட டாஸில் இங்கிலாந்து அணி வென்று முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளது.

பாகிஸ்தான் அணி :-
பகார் ஸமான், இனாம் உல் ஹக், பாபர் அஸாம், முகமது ஹபீஸ், சர்பராஸ் அகமது, சோயிப் மாலிக்,ஆஸிப் அலி, ஷதாப் கான், ஹசன் அலி, வஹாப் ரியாஸ், முகமது அமீர்

இங்கிலாந்து அணி:-
ஜேசன் ராய், ஜானி பார்ஸ்டோ, ஜோ ரூட், இயான் மோர்கன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயின் அலி, க்ரிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அதில் ரஷீத், மார்க் வுட்