புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 17 செப்டம்பர் 2020 (08:11 IST)

மேக்ஸ்வெல் அபார சதம்: போட்டியையும், தொடரையும் வென்ற ஆஸ்திரேலியா!

மேக்ஸ்வெல் அபார சதம்: போட்டியையும், தொடரையும் வென்ற ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த சில நாட்களாக இங்கிலாந்து அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது என்பது தெரிந்ததே. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்த நிலையில் நேற்று மூன்றாவது ஒருநாள் போட்டியில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்றது 
 
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. பெயர்ஸ்டோ அபார சதம் அடித்தார். அவர் 112 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பில்லிங்ஸ் 53 ரன்களும், வோக்ஸ் 53 ரன்களும் அடித்தார்கள்
 
இதனை அடுத்து 303 என்ற இமாலய இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது, வார்னர், பின்ச், ஸ்டோனிஸ், லாபிசாஞ்சே மற்றும் மார்ஷ் ஆகிய 5 பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்ததால் ஆஸ்திரேலிய அணியின் தோல்வி உறுதியானதாக கருதப்பட்டது 
 
ஆனால் கேர்ரி மற்றும் மாக்ஸ்வெல் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி இருவரும் சதம் அடித்தார்கள். மாக்ஸ்வெல் 90 பந்துகளில் 108 ரகளும், கேர்ரி 114 ரன்களில் 106 ரன்களும் எடுத்தனர்.  இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி 49.4 ஓவர்களில் 305 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது
 
இதனை அடுத்து ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது என்பது குறிப்பிடதக்கது. மேலும் இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய மாக்ஸ்வெல் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டதோடு தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது