1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 4 மார்ச் 2025 (18:04 IST)

ஆஸ்திரேலியா ஆல்-அவுட்.. இந்தியாவுக்கு இலக்கு எவ்வளவு ரன்கள்?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில், ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 50 ஓவரை முழுவதுமாக விளையாடாமல் ஆல் அவுட் ஆகிவிட்டது. இதனை அடுத்து, ஸ்கோர் என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
 
இன்றைய போட்டியில், ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே அபாரமாக விளையாடி 73 ரன்கள் அடித்தார். அதன் பின்னர், அலெக்ஸ் கேர்ரி 61 ரன்கள் அடித்து அசத்தினார்.
 
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது. முகமது ஷமி மூன்று விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 
265 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் இந்தியா வென்றால், இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விடும். மேலும், இறுதி போட்டியில் வெற்றி பெற்றால் சாம்பியன் பட்டம் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva