வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: திங்கள், 13 ஜூன் 2022 (12:01 IST)

எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு !!

Vinayagar
எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத் தான் நாம் தொடங்குவது வழக்கம். விநாயகர் என்பவர் பிரணவத்தின் வடிவம். இதன் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி.


பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண்டாகும். ‘பிள்ளையார் சுழி’ போட்டு நாம் எழுதும் எழுத்துக்களுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. எனவேதான் ‘மூல கணபதி’ என்று அவரை நாம் வர்ணிக்கின்றோம்.

கணங்களுக்கு எல்லாம் அதிபதியாவதால் அவரை ‘கணபதி’ என்று சொல்கின்றோம். நாம் ‘தேவ’ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், ‘மனித’ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், ‘அசுர’ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அனைவரும் வணங்க வேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப் பெருமானாகும்.

சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள்.

வளர்பிறை சதுர்த்தி  அன்று ஸ்ரீ விநாயகப்பெருமான்  திருவருள் புரிய வேண்டுவோம். ஸ்ரீ விநாயகப்பெருமானை தொழுது நம் பிரார்த்தனைகளை தொடங்க பூஜைகள் வழிபாடுகள் சிறப்பாக நடக்க நமது பணிகள் செய்ய, நம் தொழில் வியாபாரம் நல்ல அபிவிருத்தி அடையவும், நமது வியாபாரத்தில் தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்கவும் நிறைவான வாழ்க்கையில் எல்லா வளங்களும் பெற்று வாழவும் இல்லத்தில் எல்லோரும் இன்பமாக சகல க்ஷேமங்களுடன் வாழவும், எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி என்று சொல்லும் படிக்கு நம் விநாயகப்பெருமான் நம் கூடவே வந்து வழி நடத்தி திருவருள் புரிவார் ஸ்ரீ விநாயகப்பெருமான்.